Kavithai From the film Iruvar..!!




உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.......

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டு அணைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி,
பார்வையிலே சில நிமிடம், பயத்தோடு சில நிமிடம்,
கட்டி அனைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்,
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்.

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.....

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை,
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை,
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை,
இருவருமே தொடங்கி விட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை.

அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணிந்தாய் ,
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய் ,
கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும......

கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி...
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே..!!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே..!!

--

Comments

Ash said…
is it written by vairamuthu...wonderfull lines.......my fav lines are " thonnooru nimidangal thotanaitha kaalam than, ennooru aandugalai ..." and "...azhutha kanner inum kayil ottuthadi.." one can feel the love in these lines...brilliance.