வான் வெளிக்கு வின் மீன்கள் அழகு..!
வின் மீன்களுக்கு வெண்ணிறம் அழகு..!!
நிறம் சேர்ந்து மிளிரும் வானவில் அழகு..!
வானவில் ஆக வளைந்த உன் புருவங்கள் அழகு..!!
கண் சிமிட்டி பேசும் அந்த மொழி அழகு..!
என்னை என்றுமே திணற வைக்கும் உன் அன்பு மொழி அழகு..!!
மௌனத்தில் நாணம் கொண்டு சிரிப்பாயே அது அழகு..!
உன்னை மகிழ்விக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும்
அழகாகின்றேன் நான்..!
அழகே, என்னை என்றுமே அழகாக்கு..!!
என்றுமே மகிழ்ச்சியாய் இரு..!!
Comments